ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் : ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்
சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. திருக்குறள் உடன் அவையை தொடக்கி வைத்தார் சபாநாயகர் அப்பாவு. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்.இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன
பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ .பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார் .
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;
திமுகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல்,டீசல் விலைக் குறைப்பு,மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, கல்விக் கட்டணம் ரத்து,பொது விநியோகத் திட்டத்தின்மூலம் உளுத்தம் பருப்பு மற்றும் கூடுதல் சர்க்கரை வழங்குவது,அரசு ஊழியர்கள் மற்றும்,போக்குவரத்து ஊழியர்களுக்கான பழையஓய்வூதியத் திட்டம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம், அரசுத் துறைகள் மற்றும் கல்வி நிலையங்களில் 3.5 இலட்சம் காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டவை குறித்து நிதிநிலை அறிக்கையில் ஏதும் தெரிவிக்கப்படாதது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்
Related Tags :
Next Story