முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 18 March 2022 1:34 PM GMT (Updated: 2022-03-18T19:04:54+05:30)

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தினார்.

இதையடுத்து, சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.எ.ஏ.க்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Next Story