சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியீடு மனிதநேய மையத்தில் படித்த 11 பேர் வெற்றி
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 11 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை,
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 24 வகையான சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இதற்கான தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது.
இந்தநிலையில் சிவில் சர்வீசஸ் பதவிகளில் காலியாக இருந்த 712 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் நடந்தது. அந்த தேர்வுக்கான முடிவு அதே மாதத்தில் 31-ந்தேதி வெளியிடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து முதன்மை தேர்வு, கடந்த ஜனவரி மாதம் 7, 8, 9 மற்றும் 15, 16-ந்தேதிகளில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான பயிற்சிகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் தலைமையில் செயல்படும் மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு அனைத்து தேர்வர்களும் வீட்டில் இருந்தபடியே இந்த தேர்வுக்கு பயிற்சி பெற இந்தியாவிலேயே முதல்முறையாக தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி அளித்தது.
மேலும் இணையத்தின் வாயிலாக பதிவு செய்யப்பட்ட காணொலி மூலம் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு தேர்வர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் பயிற்சிகளை வழங்கியது.
மனிதநேய மையத்தில் படித்த 11 பேர் வெற்றி
அந்த முதன்மை தேர்வுக்கான முடிவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற 1,823 பேரின் பட்டியல் https://www.upsc.gov.in, https://www.upsconline.inஎன்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஜெ.விக்னேஷ்குமார் (பார்வை திறனற்றவர்) உள்பட 11 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர். இதில் 3 பேர் பெண்கள் ஆவார்கள். வெற்றி பெற்ற அனைவருக்கும் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தார். முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள், அடுத்தகட்டமாக நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.
அந்தவகையில் சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம், நேர்முகத் தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக வழங்க இருக்கிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் இன்று (சனிக்கிழமை) முதல் சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள மனிதநேய பயிற்சி மையத்தில் நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என்று மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story