கவுன்சிலர் தேர்தல் வெற்றியை மாற்றி அறிவித்ததற்கான உண்மை காரணத்தை கூறி புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும்
டி.கல்லுபட்டி பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவித்ததற்கான உண்மையான காரணங்களை விளக்கி புதிய மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று தேர்தல் அதிகாரிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மதுரை மாவட்டம், டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த மாதம் 22-ந்தேதி எண்ணப்பட்டன. பேரூராட்சியின், 10-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேச்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் ஒரே எண்ணிக்கையில் தலா 284 வாக்குகளை பெற்றனர்.
இதனால், குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி பழனிச்செல்வி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
நிர்ப்பந்தம்
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதல் பெஞ்ச், தேர்தல் வீடியோ பதிவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி வீடியோ பதிவை பார்த்த நீதிபதிகள், தேர்தல் முடிவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, இந்த தேர்தல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும், பழனிச்செல்வியை 10-வது வார்டு கவுன்சிலராக அறிவித்துள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது. அப்போது, கோர்ட்டில் ஆஜராகி இருந்த தேர்தல் அதிகாரி, ஆளும் கட்சியினர் கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றி அறிவித்ததாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மனுவை ஏற்க மறுப்பு
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் அதிகாரி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பணி அழுத்தம் காரணமாக தவறுதலாக தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டதாக கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேர்தல் முடிவை மாற்றி அறிவிக்க காரணம் என்ன? என்பது குறித்த உண்மை காரணங்களை விளக்கி புதிதாக மனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டனர்.
விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Related Tags :
Next Story