தூத்துக்குடி: அரியவகை ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட வனத்துறை அதிகாரிகள்...!
மணப்பாடு கடலில் அரியவகை ஆமை குஞ்சுகளை வனத்துறை அதிகாரிகள் கடலில் விட்டனர்.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடலில் ஆலிவ் ரிட்லி என்ற அரிய வகை ஆமை குஞ்சுகளை கடலில் விடும் பணிகளை வனத்துறை அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்
டைனோசர்கள் காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஆலிவ் ரிட்லி என்ற அரிய வகை ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடல் பகுதிகளை நாடி வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் மணப்பாடு, பெரியதாழை கடல் பகுதிகளில் மட்டுமே இந்த ஆமைகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற தட்பவெப்ப சூழ்நிலை நிலவுகிறது.
இப்பகுதிகளில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வனஅலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த அரிய வகை ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக ஈடுகின்ற முட்டைகளை பாதுகாப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனை தொடர்ந்து இன்று காலை 98 ஆலிவ் ரிட்லி வகை ஆமை குஞ்சுககளை மணப்பாடு கடலில் பாதுகாப்பாக விடப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story