சென்னை ராயப்பேட்டையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடக்கம்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
சென்னை,
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விவாதிக்க வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், சட்டமன்றத்தில் முன்வைக்க வேண்டிய கேள்விகள் குறித்தும் அதிமுக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story