தஞ்சை: ஆற்றுக்குள் கவிழ்ந்த சரக்கு லாரி - ஒருவர் உயிரிழப்பு...!


தஞ்சை: ஆற்றுக்குள் கவிழ்ந்த சரக்கு லாரி - ஒருவர் உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 20 March 2022 10:30 AM IST (Updated: 20 March 2022 10:14 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே சரக்கு லாரி ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

திருச்சியில் இருந்து தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு சரக்கு ஏற்றி வந்த லாரி வெண்ணாற்றுப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாலத்தில் இருந்து நிலை தடுமாறி தலைகுப்புற வெண்ணாற்றில் விழுந்தது.

இதில் லாரியில் வந்த டிரைவர் மொய்தீன் கான், அசோகன், கருப்பசாமி, நிசாய் அகமது, சக்தி ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லாரியின் மீது அமர்ந்து வந்த கார்த்திக் என்பவர் கிடைக்காத நிலையில் தீயணைப்பு வீரர்கள் அவரை தேடி வந்தனர். இந்த நிலையயில் லாரியில் சிக்கி உயிரிழந்த காத்திக் உடலை தீயணைப்பு வீரர்கள் தற்போது மீட்டு உள்ளனர். 

இதனை அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த காத்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார்,விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story