ராணிப்பேட்டை: பச்சிளம் குழந்தைகளுக்கு ஜூசில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்...
அரக்கோணம் அருகே பச்சிளம் குழந்தைகளுக்க ஜூசில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரக்கோணம்,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35) விவசாயி. இவரது மனைவி லட்சுமி (27). இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மன உளைச்சல் அடைந்த மனைவி லட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
அப்போது தான் இறந்து விட்டால் குழந்தைகள் பரிதவிக்கு என்பதற்காக முதலில் குழந்தைகளுக்கு ஜூசில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து உள்ளார். பின்னர் லட்சுமியும் குடித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இந்த நிலையியில் லட்சுமி வெகு நேரமாகியும் வெளியே வரததை கண்டு சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் வீட்டுக்குள் சென்று பார்த்து உள்ளார். அப்போது குழந்தைகளுடன் மனைவி லட்சுமி மயங்கி நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story