கோவை: கோழி பண்ணையில் தீ விபத்து - 9000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலி...!
கோவையில் உள்ள கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 9000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியானது.
கோவை,
கோவை அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆம்பூர் ஊராட்சியில் கணேஷ் குமார் என்பவர் கொட்டகை அமைத்து கறிக்கோழி பண்ணை நடத்திவருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அவரது பண்ணையில் திடீரென தீ பிடித்துள்ளது. இதில் அங்கு வளர்க்கப்பட்டு வந்த 9000 கோழி குஞ்சுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த தீவனங்கள், கோழிப்பண்ணை உபகரணங்கள் தீயில் கருகி சாம்பலாகியது. அதனைத் தொடர்ந்து அன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் சேர்ந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story