ஈரோடு: அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி உயிரிழப்பு...!
சென்னிமலை அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி உயிரிழந்து உள்ளார்.
சென்னிமலை,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே மின்னகாடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது39). இவர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வழக்கம்போல் கடந்த 19-ம் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற முருகேசன் அன்று இரவு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் சென்னிமலை அருகே ஓட்டப்பாறை ஊராட்சிக்குட்பட்ட நெடுஞ்சுனைபாறை என்ற இடத்தில் முருகேசன் உயிரிழந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
பின்னர் முருகேசனின் மனைவி தவமணி சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் முருகேசன் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் கீழே தவறி விழுந்ததில் இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story