திருப்பூர்: வரி செலுத்தாத தனியார் சிபிஎஸ்இ பள்ளி; பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்...!


திருப்பூர்: வரி செலுத்தாத தனியார் சிபிஎஸ்இ பள்ளி;  பூட்டி சீல் வைத்த நகராட்சி அதிகாரிகள்...!
x
தினத்தந்தி 21 March 2022 10:00 AM IST (Updated: 21 March 2022 9:55 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே வரி செலுத்தாத தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

ஆம்பூர்,

திருப்பூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளி கடந்த 2017 ஆண்டு முதல் நகராட்சிக்கு வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் பலமுறை பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் பள்ளி நிர்வாகம் காலம் தாழ்த்திவந்துள்ளது.

இதனால் தனியார் சிபிஎஸ்இ பள்ளி மீது நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகள் நேற்று மாலை பள்ளிக்கு சீல் வைத்தனர். இந்த நடவடிக்கையின் போது நகராட்சி அணையர் ஷகிலா,  தலைமையில் பொறியாளர் ராஜேந்திரன் சுகாதார அலுவலர் ராஜரத்தினம் வருவாய் ஆய்வாளர் குழுவினர் போன்ற அதிகாரிகள் உடன்யிருந்தனர். 

இது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

சம்பந்தப்பட்ட தனியார் சிபிஎஸ்சி பள்ளி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 5.22 லட்சம் வரி நிலுவகையில் உள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் பள்ளிக்கு அளிக்கப்பட்டு பள்ளி நிர்வாகம் வரியை செலுத்த முன்வரவில்லை. இதனால் அந்த பள்ளிக்கு நகராட்சி ஆணையர் ஷகிலா தலைமையிலாள அதிகாரிகள் பள்ளிக்கு சீல் வைத்தனர் என்று தெரிவித்தார். 


Next Story