கோவை: 5 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது..!
கோவை அன்னூரில் 5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியரை போலிசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 10 வயது மாணவி. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் மாணிக்க சுந்தரம் (47) மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியின் தலைமையாசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமையாசிரியர் அன்னூர் காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அன்னூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி ஆசிரியரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அன்னூர் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story