பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி - தமிழக நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர்


பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி - தமிழக நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர்
x
தினத்தந்தி 22 March 2022 11:52 AM IST (Updated: 22 March 2022 11:52 AM IST)
t-max-icont-min-icon

பாடநூல் கழகத்தின் பாட புத்தகங்கள் அச்சிடும் பணி முழுமையாக தமிழகத்தைச் சேர்ந்த 97 அச்சக நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் சுமார் 6 கோடி பாட புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இந்த பாட புத்தகங்களை அச்சிடும் பணி, தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் மட்டுமல்லாமல், ஆந்திரா மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த நிறுவனங்களிடமும் வழங்கப்படும். 

ஆனால் தமிழகத்தில் உள்ள அச்சக நிறுவனங்கள் சார்பில், தங்களுக்கு போதுமான பணி இல்லாத சூழல் நிலவுவதால், பாட புத்தகங்கள் அச்சிடும் பணியில் தமிழக நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் பாடநூல் கழகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

அதனை ஏற்று தற்போது பாடநூல் கழகத்தின் பாட புத்தகங்கள் அச்சிடும் பணி முழுமையாக தமிழகத்தைச் சேர்ந்த 97 அச்சக நிறுவனங்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து பாட புத்தகங்கள் அச்சிடும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரை 90 சதவீத அச்சிடும் பணி நிறைவு பெற்றுள்ளதாகவும், பள்ளிகள் திறப்பதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் பாடநூல் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Next Story