ஆன்லைன் சூதாட்டம்; சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 22 March 2022 3:18 PM IST (Updated: 22 March 2022 3:18 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

சென்னை,

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது,  ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். 

மேலும்,  ஆன்லைன் சூதாட்டம் குறித்த எந்த சட்டமும் தமிழகத்தில் இதுவரை இயற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி,  ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றம் சென்றுள்ளது; உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் அரசுக்கு மாற்றுக்கருத்து இல்லை என்று தெரிவித்தார்.


Next Story