ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - குவியும் சுற்றுலாப்பயணிகள்


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - குவியும் சுற்றுலாப்பயணிகள்
x
தினத்தந்தி 22 March 2022 3:40 PM IST (Updated: 22 March 2022 3:40 PM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. இங்கு தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள். மேலும் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றைக் காண, சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையடுத்து ஒகேனக்கல் பகுதியில் தற்போது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 
1 More update

Next Story