"கட்சியில் இருந்து யாரையும் இழக்க விரும்பவில்லை"- வைகோ


கட்சியில் இருந்து யாரையும்  இழக்க விரும்பவில்லை- வைகோ
x
தினத்தந்தி 23 March 2022 4:07 PM IST (Updated: 23 March 2022 4:07 PM IST)
t-max-icont-min-icon

கட்சிக்கு எதிராக பேசியவர்கள், அதிமுகவுடன் சேர வேண்டும் என்று தெரிவித்தவர்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;  

கட்சிக்கு எதிராக பேசியவர்கள், அதிமுகவுடன் சேர வேண்டும் என்று தெரிவித்தவர்கள்.திமுகவுடன் தேர்தலை சந்தித்து, பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

 கட்சியின் கூட்டங்களில் பங்கேற்காமல், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள். கட்சிக்கு துரோகம் செய்தவர்களை நீக்கம் செய்யாமல், விட்டு வைத்திருந்தேன். "கட்சியில் இருந்து யாரையும்  இழக்க விரும்பவில்லை” என்றார். 


Next Story