திருப்பத்தூர்: காரில் கடத்திய 280 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்....!


திருப்பத்தூர்: காரில் கடத்திய 280 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்....!
x
தினத்தந்தி 23 March 2022 4:15 PM IST (Updated: 23 March 2022 4:29 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே காரில் கடத்திய 280 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் போரில்  நாட்டறம்பள்ளி  போலீஸ் நிலைய  இன்ஸ்பெக்டர்  சாந்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார்  நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் கிருஷ்ணகிரி-வாணியம்பாடி சாலையில் சந்தேகம் அளிக்கும் வகையில்  ஒரு கார் நின்றுள்ளது. அங்கு சென்ற போலீசார் காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கார் பஞ்சர் ஆகிவிட்டது என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து காருக்குள் போலீசார் சோதனை செய்ய முயன்ற போது அவர்கள் காரை எடுத்து கொண்டு தப்பினர். பின்னர் அவர்களை தூரத்தி சென்ற போலீசார், 2 கீலோ மீட்டர் விரட்டி சென்று காரை சுற்றி வளைத்தனர். அப்போது காருக்குள் இருந்தவர்கள் காரை விட்டுவிட்டு தப்பியோடினர்.

பின்னர் போலீசார் காருக்குள் சோதனை செய்த போது  26 மூட்டைகளில் 280 கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காருடன் போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிவர்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story