கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளியில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை...!
வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துள்ளது.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மிதமான மழை பெய்தது வந்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துவந்தனர்.
இந்த மகிழ்ச்சிக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் இன்று காலை முதல் கடுமையான வெயில் அடித்து வந்தது.
இந்த நிலையில் இன்று மாலை திடீரென மேகம் கருத்து சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையால் வெப்பம் தனிந்து குளிர்ந்த சீதோசன நிலை நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story