காஞ்சிபுரம்: தேள் கொட்டி 3 வயது குழந்தை உயிரிழப்பு...!


காஞ்சிபுரம்: தேள் கொட்டி 3 வயது குழந்தை உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 23 March 2022 9:45 PM IST (Updated: 23 March 2022 9:37 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரம் அருகே தேள் கொட்டி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரமேரூர், 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் லட்சிய கண்ணன் (வயது 3).  கடந்த 20-ம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை லட்சிய கண்ணனை தேள் கொட்டி உள்ள. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையை வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த குழந்தை லட்சிய கண்ணன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 

இதுகுறித்து அறிந்த சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Next Story