மதுரை சிறைக்குள் கஞ்சா: இரண்டு காவலர்கள் பணிநீக்கம்...!
மதுரை மத்திய சிறைசாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, நீதிமன்ற காவல் மற்றும் தண்டனை பெற்ற சிறைவாசிகள் உள்ளனர்.
மதுரை,
மதுரை மத்திய சிறைக்குள் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களும், செல்போன்களும் தாராளமாக புழங்குவதாக புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து சிறைத்துறை குழு ஒன்றை அமைத்து சிறைச்சாலையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் 7 கைதிகளிடம் இருந்து கஞ்சா மற்றும் செல்போன் கைப்பற்றப்பட்டது.
கஞ்சா வைத்திருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறை காவலர்கள் விஷ்ணுகுமார், செந்தில்குமார் ஆகியோர் இருவருக்கும் தொடர்பு இருந்தது தொிய வந்தது. மேலும் அவர்கள் கடந்த 5 மாதங்களாக சிறைச்சாலைக்குள் கஞ்சா விற்பனை செய்து வருவதும், சிறைவாசிகளுக்கு செல்போன் வழங்கி சுமார் 113 முறை பேசச்செய்ததும் விசாரணையில் தொியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து இருவர் மீதான புகார் உறுதி செய்யப்பட்ட பின், சிறைக்காவலர்கள் விஷ்ணுகுமார், செந்தில்குமாரை பணி நீக்கம் செய்து சிறைத்துறை அதிரடி உத்தரவிட்டது.
Related Tags :
Next Story