விருதுநகர் பாலியல் வழக்கு: குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் - கமல்ஹாசன்
விருதுநகர் பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று மக்கள்நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நினைக்கவும் பயங்கரம். குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு, தனக்கு இழைக்கப்பட்டது தீங்குதான், அவமானமல்ல என்று பெண்கள் புரிந்துகொள்ளத் தேவையானதைச் செய்வதும் அவசியம்' என்று கூறியுள்ளார்.
விருதுநகர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, நினைக்கவும் பயங்கரம். குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு, தனக்கு இழைக்கப்பட்டது தீங்குதான், அவமானமல்ல என்று பெண்கள் புரிந்துகொள்ளத் தேவையானதைச் செய்வதும் அவசியம்.
— Kamal Haasan (@ikamalhaasan) March 23, 2022
Related Tags :
Next Story