‘தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இணைக்கப்படுமா?’ கட்சி பொதுக்குழு கூட்டத்தில் வைகோ பதில்
தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இணைக்கப்படுமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் வைகோ பதில் அளித்தார்.
சென்னை,
ம.தி.மு.க.வின் 28-வது பொதுக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், தலைமை கழக செயலாளர் துரை வைகோ உள்பட 1,284 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 206 உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. 138 சிறப்பு அழைப்பாளர்களில் 78 பேர் பங்கேற்றனர்.
மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு
கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில தீர்மானங்கள் வருமாறு:-
* தமிழர், தமிழ்நாட்டின் நலன் காக்கும் ‘திராவிட மாடல்’ நல்லாட்சியை நடத்தி வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ம.தி.மு.க. பொதுக்குழு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
* தமிழக சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கத்தக்கது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை துரிதப்படுத்த வேண்டும்.
* தமிழ் இனப்படுகொலையை முன்னின்று நடத்திய ராஜபக்சே அரசுக்கு இந்தியா ரூ.18 ஆயிரம் கோடி நிதி உதவி அளிக்க ஒப்புதல் வழங்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
ஒழுங்கு நடவடிக்கை
* ஒரே நேரத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றி வாட்டி வதைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு இப்பொதுக்குழு கண்டனம் தெரிவிப்பதுடன், விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
* ம.தி.மு.க.வின் கண்ணியத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் தீங்கு இழைப்பவர்கள் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கான முழு உரிமையை கட்சியின் பொதுச்செயலாளருக்கு வழங்குவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கின்றது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிருப்தியாளர்கள் நீக்கமா?
ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, ம.தி.மு.க.வில் துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்க கூடாது, கட்சியை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று கருத்து வெளியிட்ட சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோரும் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதுதொடர்பாக வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் யாரையும் இழக்க விரும்பவில்லை. என்னுடைய இருதயத்துக்குள் வந்தவர்கள், இருதயத்தை உடைத்து ரத்தம் கொட்ட செய்துவிட்டு போவார்களே தவிர, நான் யாரையும் புண்படுத்தி அனுப்பியது கிடையாது. எனவே அதிருப்தியாளர்களை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது’ என்றார்.
பின்னர் வைகோவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்று அதிருப்தி மாவட்ட செயலாளர்கள் சொல்லி வருகிறார்களே?
பதில்:- இந்த கட்சி என்றைக்கும் நிலைநாட்டப்பட்டு உறுதியாக இருக்கும்.
பழைய சம்பவங்களை...
கேள்வி:- வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வில் இருந்து வெளியேறி ம.தி.மு.க.வை தொடங்கிய வைகோ இன்றைக்கு....
பதில்:- பழைய சம்பவங்களை தற்போது கிளற வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது. தற்போது தி.மு.க.வுடன் நல்ல இணக்கமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அந்த இணக்கத்துடன் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்.
கேள்வி:- ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையே?
பதில்:- அவர் சென்ற கூட்டத்தில் அ.தி.மு.க.வுடன் சென்றால்தான் நல்லது என்ற கருத்தை சொன்னார். நான் அதற்கு வாய்ப்பே கிடையாது என்று சொன்னேன். தற்போது அவர் தனிமரம் ஆகிவிட்டார். அவருக்கு திருப்பூரிலேயே ஆதரவு கிடையாது. ம.தி.மு.க. சட்டத்திட்ட விதிகளின்படி பொதுசெயலாளருக்குதான் அதிகாரம் இருக்கிறது.
துரை வைகோவுக்கு ஆதரவு
கேள்வி:- துரை வைகோ கட்சிக்காக உழைக்கவில்லை என்று ம.தி.மு.க. அதிருப்தியாளர்கள் கூறி இருக்கிறார்களே?
பதில்:- 2 ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் கட்சியில் அவர்தான் சேவை செய்தார். கட்சி தொண்டர்கள் விருப்பபடிதான் இந்த பொறுப்புக்கு வந்திருக்கிறார். அவருக்கு 100-க்கு 100 சதவீதம் ஆதரவு இருக்கிறது. குழப்பம் விளைவிக்கலாம் என்று நினைத்து வந்த 5 பேர் தப்பித்தோம், பிழைத்தோம் என்று சென்றுவிட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story