கடலூர்: சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து கோட்டாட்சியர் ஆணை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மேல் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்றுமுதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் ஆணை பிறப்பித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கனகசபை மேல் தரிசனம் செய்ய அனுமதிக்கக்கோரி நகரின் பல்வேறு இடங்களில் பேராட்டங்கள் நடைபெற்று வந்ததால், இந்த 144 தடை உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் மற்றும் இதர போராட்ட குழுவினர் போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரையில் எவ்வித போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story