ஏப்ரல் 25-ந் தேதி குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு தகவல்


ஏப்ரல் 25-ந் தேதி குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு - அமைச்சர் சேகர்பாபு தகவல்
x
தினத்தந்தி 25 March 2022 1:09 PM IST (Updated: 25 March 2022 1:09 PM IST)
t-max-icont-min-icon

குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஏப்ரல் 25 ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்,

பிரசித்தி பெற்ற குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபத்திற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

Next Story