சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 40 ஆண்டு சிறை


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 40 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 26 March 2022 1:18 AM IST (Updated: 26 March 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பெருமங்கலத்தை சேர்ந்த நடராஜன் மகன் அய்யப்பன்(வயது 26). இவர், நன்னிலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து கடந்த 2021 ஆண்டு ஜனவரி மாதம் 29-ந்தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் குடவாசல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.

40 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் திருவாரூர் மகிளா கோர்ட்டு நீதிபதி விஜயகுமார் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அவர் தனது தீர்ப்பில், சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த அய்யப்பனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து அய்யப்பன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story