நாமக்கல்: போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி...!


நாமக்கல்: போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி...!
x
தினத்தந்தி 26 March 2022 6:00 PM IST (Updated: 27 March 2022 9:41 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

கந்தம்பாளையம்,

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே கொண்டரசம் பாளையத்தை சேர்ந்த கோபால் என்பவரின் மகள் வனிதா (வயது 22). இவர் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

வனிதா பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ்(29) என்பரை காதலித்து வந்து உள்ளார். இவர்கள் கடந்த 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் வனிதாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்து உள்ளது. காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதனால் கடந்த 22-ம் தேதி இருவரும் வீட்டை விட்டு சென்று உள்ளனர். சேலத்தில் இருந்த காதல் ஜோடிகள் இருவரும் அங்கு உள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்புக்காக நல்லூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இது குறித்து அவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் இரு வீட்டார் குடும்பத்தினரையும் சமாதானம் செய்து வைத்த போலீசார் மாணவி வனிதாவை காதல் கணவன் ரமேஷ் குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். 


Next Story