ஜெயலலிதாவின் உதவியாளர் ராஜம்மாள் மரணம்: ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி இரங்கல்


ராஜம்மாள்
x
ராஜம்மாள்
தினத்தந்தி 26 March 2022 9:47 PM IST (Updated: 26 March 2022 9:47 PM IST)
t-max-icont-min-icon

40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஜெயலலிதாவின் உதவியாளராக ராஜம்மாள் காலமானார்.

சென்னை, 

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் உதவியாளராகவும், நம்பிக்கைக்குரிய தோழமையாகவும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக போயஸ் தோட்டம் வேதா நிலையத்திலேயே தங்கி பணிவிடைபுரிந்த பாசத்துக்குரிய ராஜம்மாள், முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றோம்.

ராஜம்மாள் ஒரு தாயின் பரிவுடனும், பாசத்துடனும் தன்னை நேசித்து, போற்றி, பாதுகாப்பதாக பலமுறை ஜெயலலிதா நெகிழ்ந்து கூறியிருப்பதை கட்சியினரும், ஜெயலலிதாவை அறிந்தவர்களும் நினைவில் கொண்டிருக்கிறோம். 

கனிவும், பணிவும் கொண்ட ராஜம்மாளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பாசத்துக்குரிய ராஜம்மாளின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story