தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காயம் - பெற்றோர்கள் கண்டனம்...!


தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காயம் - பெற்றோர்கள் கண்டனம்...!
x
தினத்தந்தி 27 March 2022 12:45 PM IST (Updated: 27 March 2022 12:34 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே தலைமை ஆசிரியர் தாக்கியதில் மாணவன் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் புதுப்பேட்டை பகுதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக  கமலாதேவி பணியாற்றி வருகிறார்.

இப்பள்ளியில்  7-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் சைலாஷ். இந்த மாணவன் இன்று காலை பள்ளியில் விளையாடி கொண்டிருந்த போது ஆசிரியர் கண்டித்து உள்ளார். இதனை கேட்காமல் மாணவன் விளையாடியதால் ஆத்திரம் அடைந்த தமைமை ஆசிரியர் கமலாதேவி அந்த மாணவனை பிரம்பால் தாக்கியதாக கூறப்படுகின்றது.

இதில் மாணவனின் கையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சைலாசை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவன் சைலாசுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் தலைமை ஆசிரியரின் இந்த செயலுக்கு மாணவனின் பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story