ஈரோடு: கழிவறையை சுத்தம் செய்த பிஞ்சு குழந்தைகள்...!
ஈரோடு அருகே பள்ளிக் குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை முள்ளம்பட்டியில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய மாணவ, மாணவிகளை ஆசிரியைகள் நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள கழிவறை ஒன்றில் ஒரு மாணவரும், மாணவியும் கையில் துடப்பக்கட்டை கொண்டு கழிவறையை பெருக்கியும், தண்ணீர் ஊற்றி கழுவினர்.
இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் செல்போனில் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் கழிவறை சுத்தம் செய்ய நிர்ப்பந்தம் செய்த ஆசியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story