2 நாள் வேலைநிறுத்தத்துக்கு திராவிடர் கழகம் ஆதரவு - கி.வீரமணி அறிவிப்பு
அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு திராவிடர் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை,

இதுதொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
லாபம் ஈட்டும் எல்.ஐ.சி. போன்ற அரசு துறைகளையும் தனியாருக்கு தாரை வார்ப்பினை எதிர்ப்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 28-ந் தேதி (இன்று), 29-ந் தேதி (நாளை) ஆகிய நாட்களில் நடைபெறும், அகில இந்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்துக்கு திராவிடர் கழகம் தன்னுடைய ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறது. திராவிடர் கழக தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story