தமிழகத்தில் 323 இடங்களில் சாலை மறியல் 37 ஆயிரம் பேர் கைது


தமிழகத்தில் 323 இடங்களில் சாலை மறியல் 37 ஆயிரம் பேர் கைது
x

மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் 323 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றன. இதுதொடர்பாக 37 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

மத்திய அரசுக்கு 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள், வங்கி உள்பட பொதுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை முன்னெடுத்தனர்.

தமிழகத்தில் 323 இடங்களில் சாலைமறியல் போராட்டங்களும், 185 இடங்களில் ஆர்ப்பாட்டங்களும், 3 இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும், 5 இடங்களில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகை போராட்டமும் நடைபெற்றன. இதுதொடர்பாக 37 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். மேற்கண்ட தகவல் டி.ஜி.பி. அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

சென்னையில் 1,300 பேர் கைது

சென்னையில் 6 இடங்களில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. அண்ணாசாலை, கிண்டி உள்பட 5 இடங்களில் சாலைமறியல் போராட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியாக கலைந்து சென்றுவிட்டனர்.

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் மட்டும் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் சென்னையில் 200 பெண்கள் உள்பட 1,300 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக சரகத்தில் 30 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. படப்பை சந்திப்பில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த 20 பெண்கள் உள்பட 65 பேர் கைதாகி, பின்னர் விடுதலையாகினர்.

Next Story