ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது..!


ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது..!
x
தினத்தந்தி 29 March 2022 7:57 AM IST (Updated: 29 March 2022 7:57 AM IST)
t-max-icont-min-icon

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 16 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் 4 நாட்கள் போராட்டத்திற்க்கு பிறகு நேற்று காலை 500க்கும் மேற்பட்ட விசை படகுகளில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் இன்று நள்ளிரவு ஒரு விசைப்படகில் இருந்த 4 மீனவர்களையும் அவர்களது விசை படகையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை ஊர்காவல்துறை துறைமுகத்திற்கு அழைத்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீனவர்கள் 4 நாள் வேலை நிறுத்தத்திற்க்கு பிறகு மீன் பிடிக்க சென்ற போது மேற்கொண்ட இந்த கைது நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story