காதலன் கண்முன்னே காதலி கூட்டு பாலியல் பலாத்காரம்


காதலன் கண்முன்னே காதலி கூட்டு பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 30 March 2022 2:19 AM IST (Updated: 30 March 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

காதலன் கண்முன்னே காதலி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்,

கடலூர் செம்மண்டலம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் 21 வயது இளம்பெண் ஒருவர், அங்கிருந்த கர்ப்பிணி ஒருவரிடம் தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஆரோக்கியராஜ், அழுது கொண்டிருந்த இளம்பெண்ணிடம் விசாரித்தார். அப்போது அவர் தன்னை சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த துணை போலீஸ் சூப்பிரண்டு, இதுபற்றி முழுமையாக விசாரிக்க கடலூர் புதுநகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இளம்பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் இளம்பெண் கூறியதாவது:-

பாழடைந்த கட்டிடத்தில்...

எனது சொந்த ஊர் நெல்லிக்குப்பம் ஆகும். கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு ஸ்டேசனரி கடையில் வேலை பார்த்து வருகிறேன். நானும், குண்டுஉப்பலவாடியை சேர்ந்த 23 வயதுடைய தனியார் நிதி நிறுவன ஊழியருடன் காதலித்து வருகிறோம்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் நானும், காதலனும் மோட்டார்சைக்கிளில் தனிமையில் சந்தித்து பேசுவதற்காக கம்மியம்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு சென்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் எங்களை ஆபாசமாக திட்டி எங்கள் கையில் இருந்த ரூ.550 ரொக்கப்பணம், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்தனர்.

பாலியல் பலாத்காரம்

தொடர்ந்து அவர்கள், என்னுடைய காதலனை கொடூரமாக தாக்கினர். பின்னர் 2 பேர் என்னுடைய காதலனை பிடித்துக்கொண்டு, ஒருவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தான். மேலும் இங்கு நடந்ததை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி, காதலன் செல்போனை எடுத்து சென்றுவிட்டனர்.

இவ்வாறு அந்த இளம்பெண் கூறினார்.

இதையடுத்து, சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிளை பிடிக்க போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

செல்போனில் படம் பிடித்து மிரட்டல்

இந்த நிலையில் நேற்று காலை கடலூர் கம்மியம்பேட்டை பாலத்தின் கீழ் பகுதியில் பதுங்கி இருந்த 3 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடலூர் குப்பன்குளத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் கிஷோர் (வயது 19), நாகப்பன் மகன் சதீஷ் (19), புதுப்பாளையம் ஆர்.பி.நகர் ஷாஜகான் மகன் ஆரிப் (19) ஆகிய 3 பேர் என்பதும், மேற்படி காதலனும், காதலியும் தனிமையில் இருந்ததை செல்போனில் படம் பிடித்து மிரட்டியதும், சதீஷ், ஆரிப் 2 பேரும் காதலனை பிடித்துக்கொள்ள கிஷோர் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

3 வாலிபர்கள் கைது

இதையடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் 8 பிரிவுகளின் கீழ் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Next Story