7 ஆயிரத்து 382 பணியிடங்களுக்கு: ஜூலை 24-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு
7 ஆயிரத்து 382 பணியிடங்களுக்கு ஜூலை 24-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடக்கிறது. இதற்கு இன்று (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
குரூப்-4 பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் கா.பாலச்சந்திரன், சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
2 ஆண்டுகளாக குரூப்-4 பதவிகளுக்கான தேர்வு நடத்தப்படவில்லை. அதன் பிறகு, தற்போது தேர்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி, 274 கிராம நிர்வாக அலுவலர், 3 ஆயிரத்து 681 ஜூனியர் அசிஸ்டெண்ட், 50 பில் கலெக்டர், 2 ஆயிரத்து 108 தட்டச்சர், 1,024 சுருக்கெழுத்து தட்டச்சர், ஒரு ஸ்டோர் கீப்பர் பணியிடங்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 138 இடங்களும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் கீழ் வரும் 163 ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 7 ஆயிரத்து 301 இடங்களுக்கு போட்டி தேர்வு நடக்க இருக்கிறது. இதுதவிர 81 இடங்கள் விளையாட்டு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்கள் கலந்தாய்வுக்கு முன்பு வரை மேலும் உயர்த்தப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு 25 லட்சம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இதற்கு 30-ந் தேதி (இன்று) முதல் தேர்வர்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அடுத்த மாதம் (ஏப்ரல்) 28-ந் தேதி ஆகும்.
ஜூலை மாதம் தேர்வு
தேர்வு ஜூலை மாதம் 24-ந் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் 3 மணி நேரம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. 200 வினாக்களில் முதல் 100 வினாக்கள் தமிழ் வழி கட்டாய தேர்ச்சி வினாக்களாக கேட்கப்படும்.
அதில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, மொத்த தேர்வு மதிப்பெண்ணும் கணக்கில் கொள்ளப்படும். அவற்றில் 90 மதிப்பெண்கள் பெற்றால் தகுதியுடையவராக கருதப்படுவார்கள். தேர்வு முடிவு அக்டோபர் மாதத்திலும், கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் மாதத்திலும் நடத்தப்படும்.
கடந்த முறை நடந்த குரூப்-4 தேர்வு போல எந்த தவறும் நடக்காதபடி, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. முன்பு தேர்வர்கள் தேர்வு மையத்தை தேர்வு செய்வார்கள். இப்போது டி.என்.பி.எஸ்.சி.தான் தேர்வு மையத்தை தேர்வு செய்கிறது. ஓ.எம்.ஆர். விடைத்தாளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
என்ன நடவடிக்கை?
தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் முஸ்லிம் பிரிவினர் விண்ணப்பிக்கும் இடத்தில் மதம் மாறியவர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதுபற்றி அரசு விளக்கம் கேட்டிருக்கிறது. அதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. வருகிற 8-ந் தேதி கமிஷன் கூட்டம் நடக்கிறது. அதில் முடிவெடுக்கப்படும்.
குரூப்-4 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாகவே, அதுதொடர்பான விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. அதுதொடர்பாக விசாரிக்கக்கோரி போலீசில் புகார் கூற உள்ளோம். என்ன நடவடிக்கை? என்பது பற்றி பின்னர் தெரிவிக்கப்படும்.
வாரியங்கள், கழகங்கள் ஆகியவற்றில் உள்ள காலிப்பணியிடங்களையும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தி நிரப்ப இருக்கிறது. அதன்படி, இந்த தேர்வில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கீழ் வரும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இனி வரக்கூடிய நாட்களிலும் வாரியங்கள், கழகங்கள் ஆகியவற்றில் வரும் பணியிடங்கள் அனைத்து தொகுதிகளிலும் சேர்த்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் அதனை நிரப்பும்.
கணினி வழி தேர்வு
தற்போது டி.என்.பி.எஸ்.சி. புது முயற்சியாக ஓ.எம்.ஆர். விடைத்தாளுக்கு பதிலாக கணினி வழி தேர்வை நடத்த உள்ளது. வருகிற ஜூன் மாதம் 19-ந் தேதி நடைபெறும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கான பணியிடங்களுக்கு இந்த கணினி வழி தேர்வு பரீட்சார்த்த முறையில் நடத்துகிறோம். அதில் தவறு எதுவும் நடக்காதபடி அதற்கேற்றாற்போல் நடவடிக்கை எடுக்கப்படும். விரைவாக தேர்வு முடிவை வெளியிடுவதற்கும் இது நல்ல முறையாக இருக்கும். எந்த ஒரு பணியிடத்துக்கு 5 ஆயிரத்துக்கு கீழ் தேர்வர்கள் விண்ணப்பிக்கிறார்களோ? அதற்கு தான் கணினி வழி தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வழக்கமாக குரூப்-4 பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பில், கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு ஏராளமான இடங்கள் அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை 274 இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது, 'வருவாய்த்துறை சார்பில் வழங்கப்பட்ட தற்போது வரையிலான காலிப்பணியிடம்தான் அது. இந்த பணியிடம் சார்ந்த துறையில் இருந்து காலிப்பணியிடங்கள் குறித்த தகவல் மேலும் வந்தால், அதனை கலந்தாய்வுக்கு முன்பு வரை இந்த அறிவிப்பில் சேர்க்கப்படும். அதற்கான அதிகாரம் டி.என்.பி.எஸ்.சி.க்கு இருக்கிறது' என்றார்.
பேட்டியின் போது, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர் ச.முனியநாதன், செயலாளர் ப.உமா மகேஸ்வரி, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story