பஞ்சு இறக்குமதி வரியை குறைக்க மத்திய மந்திரியிடம் வலியுறுத்தல் - வானதி சீனிவாசன்

பஞ்சு இறக்குமதி வரியை குறைக்க மத்திய மந்திரியிடம் வலியுறுத்தியுள்ளதாக கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை,
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேற்று கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாநகர் மக்களின் முக்கிய தேவையான மெட்ரோ ரெயில், ஸ்மார்ட் சிட்டி பணிகள் உள்ளிட்டவற்றை விரைவு படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
கோவை மாநகரில் கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக புதிய சாலைகள் போடப்படாமல் இருக்கின்றது. இதன்காரணமாக சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மாநகர் பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
அதிக வேலைவாய்ப்பு கொடுக்கும் சிறு குறு தொழில்களை ஊக்கபடுத்த எந்த அறிவிப்பும் தமிழக பட்ஜெட்டில் இல்லை. இந்த பட்ஜெட்டில் கோவை புறக்கணிக்கப்பட்டு உள்ளது. பஞ்சு விலை உயர்வு குறித்து கடந்த வாரமே மத்திய மந்திரியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். மேலும் பஞ்சு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.
Related Tags :
Next Story