ஈரோடு: தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை...!


ஈரோடு: தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை...!
x
தினத்தந்தி 30 March 2022 7:00 PM IST (Updated: 30 March 2022 6:41 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. அந்த வகையில் அவ்வப்போது சில பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இன்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இந்த மழை  தாளவாடி, பாரதிபுரம்,தொட்டகாஜனூர்,ஓசூர், சூசைபுரம், தொட்டமுதிகரை பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவிவருகிறது.

Next Story