"பொதுத்துறை வங்கிகளில் அம்பேத்கர் படத்தை வைக்கலாம்" - சென்னை ஐகோர்ட்
வங்கியில் அம்பேத்கரின் படத்தை வைத்ததற்காக கிளை உதவியாளரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஆணை செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை பாரத ஸ்டேட் வங்கியில் அம்பேத்கரின் படத்தை வைத்ததற்காக கிளை உதவியாளரை பணி நீக்கம் செய்யப்பட்ட ஆணை செல்லாது என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் பொதுத்துறை வங்கிகளில் அம்பேத்கர் படத்தை வைக்கலாம் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் வங்கியில் அம்பேத்கர் புகைப்படம் வைத்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டவருக்கு மீண்டும் பணிநியமனம் வழங்க வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story