சொத்து தகராறு - அக்காவை அரிவாளால் வெட்டிய தம்பி...!


சொத்து தகராறு - அக்காவை அரிவாளால் வெட்டிய தம்பி...!
x
தினத்தந்தி 30 March 2022 9:59 PM IST (Updated: 30 March 2022 9:59 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே சொத்து தகராறில் அக்காவை தம்பி அரிவாளால் வெட்டி உள்ளார்.

திருச்சி, 

திருச்சி மாவட்டம் திருவரம்பூரை சேர்ந்த  மைக்கேல் டைசனின் மனைவி தனலட்சுமி (வயது 24 ). இவரது சகோதரர் தனக்கோடி (22).

தனலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

தற்போது தனது சகோதரன் தனக்கோடி வீட்டில் தனலட்சுமி வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகின்றது. 

இதனால் இன்று திடீரென இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தனக்கோடி தான் வைத்திருந்த அரிவாளால் அவரது சகோதரி தனலட்சுமியையும் அவரது குழந்தையையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த வெட்டு காயமடைந்த தனலட்சுமி கூச்சலிடு உள்ளார். இதனை அறிந்த  அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்கை அளித்து வருகின்றனர்.

இத்தகவல் அறிந்த துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story