கலைஞர் நூலக கட்டுமான பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்


கலைஞர் நூலக கட்டுமான பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
x
தினத்தந்தி 31 March 2022 10:23 AM IST (Updated: 31 March 2022 10:23 AM IST)
t-max-icont-min-icon

கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகள் இந்த ஆண்டிற்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

மதுரை,

மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகள் குறித்து அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதுரை கலெக்டர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு இன்று ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னை அண்ணா நூலகத்திற்கு இணையாக மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நுலகத்தின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கலைஞர் நினைவு நூலகத்திற்கு ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நூலக கட்டுமான பணிகள் இந்த ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story