ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.
இதனால் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. சாலையில் நடந்து சென்ற மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குடை பிடித்தபடி செல்கின்றனர். இதுமட்டுமின்றி, அனல் காற்றும் வீசி வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து தற்போது 101 டிகிரியையும் தாண்டி உள்ளது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அக்னி நட்சத்திர காலங்களில் 110 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் தீபகற்ப பகுதியில் இயல்பை விட வெப்பநிலை குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டி ஏப்ரல் மாதத்தில் இயல்பை விட பெரும்பாலான இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இந்திய பெருங்கடல் வெப்பநிலை சமன் என்ற குறியீட்டில் உள்ள நிலையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story