பி.ஜி.மல்யாவுக்கு தெற்கு ரெயில்வே நிர்வாக பொறுப்பு ரெயில்வே வாரியம் அறிவிப்பு
பி.ஜி.மல்யாவுக்கு தெற்கு ரெயில்வே நிர்வாக பொறுப்பு ரெயில்வே வாரியம் அறிவிப்பு.
சென்னை,
தெற்கு ரெயில்வே பொது மேலாளராக இருந்த ஜான் தாமஸ் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, தெற்கு ரெயில்வே பொது மேலாளர் நிர்வாக பொறுப்பை, ஐ.சி.எப். பொது மேலாளர் ஏ.கே.அகர்வால் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் நிர்வாக பொறுப்பை, தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளராக பதவி வகித்து வரும் பி.ஜி.மல்யா கூடுதலாக கவனிப்பார் என ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இவர், பல்வேறு மண்டலங்களில் ரெயில்வே துறையில் முக்கிய பொறுப்பை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story