உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளியை கொன்று புதைத்த நண்பன்...!
உளுந்தூர்பேட்டை அருகே மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக தொழிலாளியை கொன்று புதைத்த நண்பரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை களமருதூரை சேர்ந்த கூலி தொழிலாளி பாண்டியன் (வயது 43). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நணபர் வீட்டுக்கு செல்வதாக செல்லிவிட்டு சென்ற பாண்டியன் வீடு திரும்பவில்லை.
கூலி வேலைக்கு சென்று இருப்பார் என்று நினைத்த நிலையில், சுமார் 20 நாட்களுக்கும் மேலாக பாண்டியன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பாண்டியனை காணவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான பாண்டியனை தேடிவந்தனர். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் போலீசாருக்கு கிடைத்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில் பாண்டியனின் நண்பன் வேல்முருகன் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல் போலீசாருக்கு கிடைத்து உள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
பெங்களூருவில் பதுங்கியிருந்த பாண்டியனின் நண்பர் வேல்முருகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வேல்முருகன் மனைவிக்கும் பாண்டியனுக்கும் தகாத உறவு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாண்டியன் கொலை செய்யப்பட்டு உள்ளார். பாண்டியனை கொலை செய்த வேல்முருகன் அருகே உள்ள வயல்வெளியில் குழி தோண்டி புதைத்து உள்ளார்.
பின்னர், ஒன்றும் தெரியாதது போல் வேல்முருகன் பெங்களூருக்கு வேலைக்கு சென்று உள்ளார். தற்போது பாண்டியன் கொலை செய்து புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரின் உடலை போலீசார் வெளியே எடுத்து பிரேத பரிசோதனை செய்து உள்ளார் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story