நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி....!
வாழப்பாடி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
வாழப்பாடி,
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் , மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், கோடை வெயிலை தணிக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்வினை, தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இதுபோன்று வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா இருசக்கர வாகன வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடியில் தமிழக மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். திமுக அமைச்சரே, சாதியின் பெயரைச் சொல்லி அரசு ஊழியரை தரக்குறைவாக பேசியுள்ளார். நாட்டிற்ககே திமுக ஆட்சி சமூகநீதிக்கு எடுத்துக்காட்டு என்றும், திராவிட மாடல் ஆட்சி என்றும் கூறுகின்றனர். இதுதான் சமூக நீதியா. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story