தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 2 April 2022 8:25 PM IST (Updated: 2 April 2022 8:25 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இன்று 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 24 ஆயிரத்து 798 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 887 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 284 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் தொடர்ந்து 16-வது நாளாக இன்று கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. மேலும் 39 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story