"தமிழகம் முழுவதும் 4,808 பள்ளி கட்டிடங்கள் இடிப்பு" - பள்ளிக் கல்வித்துறை
தமிழகம் முழுவதும் இதுவரை 4,808 பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 228 பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்படாமல் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. திருநெல்வேலியில் சில மாதங்களுக்கு முன்பு பழமையான கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் பழுதடைந்த பள்ளிக்கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு அவற்றை இடிக்கும் பணி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதன்படி இதுவரை 3 ஆயிரத்து 482 பள்ளிகளில் பழுதடைந்த 4 ஆயிரத்து 808 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது என்றும் 8 ஆயிரத்து 828 பழுதடைந்த கட்டிடங்கள் இன்னும் இடிக்கப்படாமல் இருக்கின்றன என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 9 ஆயிரத்து 573 பள்ளிகளில் 13 ஆயிரத்து 36 பழுதடைந்த கட்டிடங்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story