சொத்து வரியை உயர்த்தி மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது - செல்லூர் ராஜூ


சொத்து வரியை உயர்த்தி மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது - செல்லூர் ராஜூ
x
தினத்தந்தி 3 April 2022 10:53 PM IST (Updated: 3 April 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சென்னை,

தமிழக அரசு பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் சொத்து வரி உயர்வு செய்யப்படுவதாகவும் நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் இந்த வரி உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்தநிலையில், சொத்து வரி உயர்வு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-

சொத்து வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது. சொத்து வரி உயர்வு என்ற அறிவிப்பால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 11 மாதங்களில் அதிமுகவின் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியம் மலரும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும் என்று கூறினார்.

Next Story