135-வது மாரத்தானை நிறைவு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்


135-வது மாரத்தானை நிறைவு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 4 April 2022 12:29 AM IST (Updated: 4 April 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு உடல்நலம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் செய்து வருகிறார்.

சென்னை,

தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு உடல்நலம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் செய்து வருகிறார். தானே முன் உதாரணமாக இருக்கும் விதமாக பல முறை மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் தனது 135-வது மாரத்தான் தொடர் ஓட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிறைவு செய்தார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நேற்று நடைபெற்ற 21.1 கி.மீ தூர மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Next Story