தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் அமையுங்கள் முதல்-அமைச்சர் வேண்டுகோள்
கோடை கால வெப்பத்தில் இருந்து தமிழக மக்களின் தாகத்தை காக்கும் வகையில் தண்ணீர் பந்தலை அமைக்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை கால வெப்பம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே 100 டிகிரிக்கு மேல் வெப்பம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக மக்களை இக்கோடை கால வெப்பத்திலிருந்து காக்கும் வகையில் தி.மு.க. சார்பில் தமிழகத்தில் உள்ள மாநகர, நகர, பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிராமங்கள் என அனைத்து இடங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான தெருமுனை சந்திப்புகளிலும், சாலை மற்றும் தெருக்கள் ஓரமாகவும், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் யாருக்கும் எவ்வித இடையூறு இல்லாமல் தண்ணீர் பந்தல் அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும்.
இளநீர், குளிர்பானம்
தி.மு.க. சார்பில் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்பூசணி போன்ற கோடை வெப்பத்தை தணிக்கும் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கி அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும்
மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கோடை காலம் முழுவதும் தண்ணீர் பந்தல் தொடர்ந்து செயல்பட தங்களை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story