தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது
தமிழக அரசுத்துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதிப்பதற்காக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மே 10-ந்தேதி வரை 22 நாட்கள் நடைபெறவுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் 18-ந்தேதி பொது நிதிநிலை அறிக்கையும் (பொது பட்ஜெட்), 19-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்து, அதற்கு 2 துறைகளின் அமைச்சர்களும் பதில் அளித்தனர். அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 24-ந்தேதி நிறைவடைந்தது.
இந்தநிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் கடந்த வாரம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா, பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நேரலை ஒளிபரப்பு
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக அரசு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதிக்க, சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 6-ந்தேதி (நாளை) தொடங்கி மே 10-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார். எந்தெந்த தேதியில் எந்தெந்த அரசுத்துறைகளின் மானியக்கோரிக்கை விவாதிக்கப்படும்? என்ற விவரங்களையும் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார்.
அதன்படி நாளை சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குகிறது. சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கேள்வி நேரம் மற்றும் அவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் வெளியிடும் அறிவிப்புகள் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.
சொத்து வரி உயர்வு
தமிழகத்தில் சமீபகாலமாக பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. சாலை விபத்துகளும் அதிகமாக காணப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களை சட்டசபையில் எடுத்துச்சொல்ல அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டும். எனவே சட்டசபையில் காரசார விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து போராட்டங்களை அ.தி.மு.க. அறிவித்துள்ளது. வெளியே போராட்டம் நடத்திய அதே வேகத்தை சட்டசபையிலும் அ.தி.மு.க. காட்ட முயற்சிக்கும். எனவே சட்டசபையில் பரபரப்பு ஏற்படக்கூடும். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டுவதால் 22 நாட்கள் நடைபெறும் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பரபரப்புக்கும், சலசலப்பிற்கும் பஞ்சம் இருக்காது.
மு.க.ஸ்டாலின் ஆய்வு
இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த நிதியாண்டில் மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
புதிய அறிவிப்புகள்
மேலும், இந்த நிதியாண்டின் மானிய கோரிக்கையில் துறை வாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, ஐ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், சக்கரபாணி, பழனிவேல் தியாகராஜன், தலைமைச்செயலாளர் இறையன்பு, நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் முகமது நசிமுதீன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் நா.முருகானந்தம், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மை செயலாளர் பி. அமுதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story