மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்: கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டு ஜெயில்
மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்: கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வருக்கு 5 ஆண்டு ஜெயில் சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு.
சென்னை,
சென்னையை அடுத்த நெற்குன்றம் கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், கடந்த 2018-ம் ஆண்டு தனது மகனை சென்னை அசோக்நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.
அந்த சிறுவனை பள்ளியில் சேர்த்துக்கொள்வதற்காக அப்போது பள்ளியின் முதல்வராக இருந்த ஆனந்தன் ரூ.1½ லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். பள்ளியில் சேர்க்கும்போது ரூ.1 லட்சத்தையும், அதன்பின்பு 15 நாட்கள் கழித்து மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாயை வழங்கவும் என்று முதல்வர் கோரி உள்ளார்.
இதுகுறித்து ராஜேந்திரன் சி.பி.ஐ. போலீசாரிடம் புகார் அளித்தார். சி.பி.ஐ. போலீசார் அறிவுறுத்தலின் பேரில் லஞ்சப்பணம் ரூ.1 லட்சத்தை ராஜேந்திரன் கொடுத்தபோது அதை பெற்றுக்கொண்ட பள்ளி முதல்வர் ஆனந்தனை சி.பி.ஐ. அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி வெங்கடவரதன் முன்னிலையில் நடந்தது. சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் சுரேந்திரமோகன் ஆஜராகி வாதாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளி முதல்வர் ஆனந்தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
அபராத தொகையில் ரூ.30 ஆயிரத்தை புகார் தாரரான ராஜேந்திரனுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story